Thursday, April 20, 2023

 




பரணி பாட வாரீர்!  

அன்புமிக்க

   இனிய நண்பர்களே!

இந்த புத்தகங்கள்

வரிகள்

நிறைந்த புத்தகங்களல்ல!

இவை,

வலிகள் நிரம்பி வழியும் புத்தகங்கள்!

   நீங்களும், நானும், நம்மில் பலரும் ஒரு சுகக் கூட்டிற்குள்,

சொகுசு நாற்காலியில் சாய்ந்து கொண்டு, வாழ்க்கையை

அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்!

  இதற்கெல்லாம் யார் காரணம்? நிச்சயமாக, நம் உழைப்பு மட்டுமே காரணம் அல்ல!

  வயதான பெற்றோரையும், இளம் மனைவியரையும், பச்சிளம் குழந்தைகளையும், சின்னஞ்சிறு சிறார்களையும், திருமணத்திற்குக் காத்துக் கொண்டிருக்கும் சகோதரிகளையும் சொந்த ஊரில் விட்டுவிட்டு,

பனிபடர்ந்த சிகரங்கள் மீதும், அடர்ந்த காடுகளிலும், ஆழ் கடலிலும்,

அளவற்ற வான் பரப்பிலும், கடமையே கண்ணாக, எந்நேரமும், கண் துஞ்சாமல்,

காவல் காத்து நிற்கும் நம் முப்படை வீரர்கள்தான் முழு முதற் காரணம்!

  அவர்களின், கடமை என்ற வேள்வித் தீயில் தான் நாம்

"குளிர் காய்ந்து" கொண்டிருக்கிறோம்!

  அந்த வீரர்களின் துப்பாக்கிகள் சுடவில்லையெனில், இங்கே நீங்களும், நானும், நம் பிள்ளைகளும் "சுய படங்கள்" சுட்டுக் கொண்டிருக்க முடியாது!

  இந்தப் புத்தகங்கள் சொல்லும் கதைகள் சிலதான்! இன்னும் சொல்லப்பட வேண்டிய, பரணி பாடப்படாத, வீரர்களின் கதைகள் ஏராளம்!

  இப்படிப்பட்ட வீரர்களுக்கு,

 தன் குடும்பத்தையும், இன்னுயிரையும்  துச்சமாக மதித்து, நாட்டிற்காக-நமக்காக, உயிர்த்தியாகம் செய்ய எந்நேரமும் துடித்துக் கொண்டிருக்கும் அந்த முகம்

தெரியா வீரர்களுக்கு, நாம் நன்றி சொல்ல வேண்டாமா?

ந்த செய்நன்றிக் கடன் தீர்க்க, சிறந்த வழி  இந்தப் புத்தகத்தை விலை கொடுத்து வாங்கி படிப்பதன்றி வேறு எதுவாக இருக்க முடியும்அது மட்டுல்ல, இப்படிப்பட்ட வீரர்கள் பற்றி நம் பிள்ளைகளையும், பேரன்,பேத்திகளையும் அறிந்து கொள்ளச் செய்வது நம் தலையாய கடமை அல்லவா?

  நண்பர்களே, புத்தகத்தை வாங்குங்கள்! வாசியுங்கள்!

அவைகளைப் பற்றி நண்பர்களிடம் பேசுங்கள்! அவர்களையும்

வாங்கச் சொல்லி வற்புறுத்துங்கள்! திருமண விழாக்களில் அவற்றைப்

பரிசாகக் கொடுங்கள்! உங்களால் முடிந்தவரை, நம் வீரர்தம் தியாகத்தின் மாண்பை இளைய சமுதாயத்தினரிடம் கொண்டு செல்லுங்கள்!

 அவர் தம் பரணி பாடுங்கள்!     

 வாழ்க்கையின் மதிப்பீடுகள் மக்கிப் போய்க் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், இப்படிப்பட்ட புத்தகங்களே, வாழ்க்கைக்கு வழிகாட்டும், 

வாழ்க்கையின் உன்னதத்தை உணர்த்தும், கைவிளக்கு!

  இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்க நான் முதன் முதலில் வாசித்த போது என் கண்கள் கசிந்தன!  "இப்படியெல்லாம்கூட

நடக்குமா?" என்று திகைத்துப் போயிருக்கிறேன், பல இடங்களில்!

தமிழ் கையெழுத்துப் பிரதியை வாசித்துப் பார்த்த என் மனைவியும் கண் கலங்கினார்!

 நீங்கள் வாசித்தால், உங்கள் உள்ளமும் உருகும்! கண்களும் கசியும், சந்தேகமில்லாமல்!

  இந்தப் புத்தகத்தை நான் மொழி பெயர்த்தது, என் வாழ்க்கையில் எனக்குக்

கிடைத்த அரிய வாய்ப்பு! இந்த வைர வாய்ப்பினை  வழங்கிய சென்னை, "ஜீரோ டிகிரி பப்ளிஷிங்" பங்குதாரரகளான திரு. ராம்ஜி அவர்களுக்கும், திருமதி.காயத்ரி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

அன்புடன்,

.ராம்கோபால் (லினிரா) அ.பேசி எண்: 9965412116.  21/04/23 கோவை-46.

 

குறிப்பு: ஜீரோ டிகிரி பப்ளிஷிங், சென்னை.

அ.பேசி எண்: 96001 95441


Tuesday, August 17, 2021

 

கடவுளும் காரிகையும்

கோயில் வாசல்:
காரிலிருந்து இறங்கினாள்
காரிகை!
காலணி வைக்க மறைவான
இடம் தேடினாள்!
ஆய்ந்து, ஆய்ந்து,
ஆங்கோர் மூலையில்
அதை வைத்தாள்!
கயல் விழிகளை சுழலவிட்டாள்,
சுற்றும் முற்றும்!
"
கடவுளே!
யாரும் பார்க்கவில்லை
என் காலணிகளை!
நேற்றுதான் வாங்கினேன்!
ஆயிரம் ரூபாய்!"
கடவுளுக்கு சேதி பறந்தது!
காலணி காப்போனை
அவள் பார்த்தாள் அச்சமுடன்:
"
திருடிக் கொள்வானோ?"
கள்ளம் கொள் காரிகைக்கு
காலணியைக் காக்க,
காசுகொடுக்க மனமில்லை!
                        ***
கருவறையில் கடவுள்!
எதிரே பக்தை-பக்திப் பிழம்பு!
உதடுகளில் கடவுள் ஜபம்
உள்ளத்தில் காலணி தவம்!
பூசை முடிந்து திரும்பினால்
காலணியைக் காணோம்!
கண்களில் எரிந்தது கோபம்!
நவீன கண்ணகி
நீதி கேட்டாள் கடவுளிடம்:
"
எங்கே என் காற்செருப்பு?"
பயந்து போனான் பகவான்!
"
எரித்து விடுவாளோ?"
எம் பெருமான் நடுங்கினான்!
"
அம்மா! உங்கள் காலணி இங்கே!"
அசிரீரி ஒலித்தது!
கைகளில் காரிகையின்
காலணியுடன் அழைத்தவன்,
காலணி காப்போன்!
சீறி வரும் சிங்கமென
அவனை நோக்கி நடந்தவள்,
அவன் கரங்களிலிருந்த
காலணியைப் பறித்தாள்;
காசை நீட்டீனாள்!
காலணி காப்போன்
தன் தலைக்கு மேல்
அசைந்தாடிய அட்டையை
விழிகளால் சுட்டினான்:
"
இலவச காலணி காப்பகம்!"
காசால் கல்லாகிப் போன
காரிகை கர்வத்துடன்
கடந்து போனாள் அவனை!
கடவுளுக்கு போன மூச்சு
திரும்பி வந்தது!
        
---லினிரா  17/08.21

 

Friday, August 6, 2021

 

கிழித்து….

“கிழித்துவிடவா?” என்றேன்,

“கிழித்துவிடேன்!” என்றது:

“எரித்துவிடவா?” என்றேன்,

“எரித்துவிடு!” என்றது!

“குப்பைத் தொட்டியில்

வீசிவிடவா?” என்றேன்,

“பார்த்துப்போடு மக்கும் குப்பைத் தொட்டியில்!

மாட்டிக்கொள்ளப் போகிறாய் என்றது!”

”எதற்கு இப்படி” என்றது அது!

“வாரிசுகள் சலித்துக்கொண்டால்..…”

“இதற்கா இப்படிக் கவலை?

என்னையும் நண்பர்களையும்

எடைக்குப் போட்டுவிடு!

வரும் பணத்தில்

வாரிசுகளுக்கு பங்கு!”

சொல்லிவிட்டு,

படபடப்புடன் தன்னை மூடிக் கொண்டது

என் மடியிலிருந்த புத்தகம்!

    ---லினிரா 

Sunday, July 18, 2021

 

வெளி நாட்டில் வாழும்
பிள்ளைகளைப் பெற்ற
(அ) பாக்கியவான்களுக்கு
சமர்ப்பணம்!

வெளி நாட்டில்
வாழும் பிள்ளைகளும்
பேரக் குழந்தைகளும்
விமானத்தில்
வந்திறங்கும் போது
வெகு சுகமாய்த்தானிருக்கும்
பேரக் குழந்தைகள்
ஓடி வந்து கட்டிப்பிடித்து
சொர்க்கத்தைக் காட்டும்!
அவர்கள் இருக்கும்
அத்தனை நாட்களும்
இன்பம் இதயத்தில்
அரியாசனம் போட்டு
அமர்ந்து கொள்ளும்!
ஊர் சுற்றல்,
உணவு விடுதிகள்,
உடைகள் வாங்குதல்,
உறவினர் இல்லம் செல்லல்,
உறங்கு முன் நடு நிசி வரை
கதைகள் சொல்லலென
நிகழும்,
சுகங்களின் சங்கமம்!
வெளி நாட்டு நயத்தகு
நனி நாகரீகத்தால்
அடக்கி வைக்கப்பட்டிருந்த
ஆதிப்பிறவியின் சேட்டைகள்
அத்தனையும் அரங்கேறும்
தாத்தா,பாட்டி வீடுகளில்!
தெருவில் விளையாடும்
பேரக் குழந்தைகள்
திடீரென வீட்டுக்குள் நுழைந்து தரும்,
அரைத் தூக்கத்திலிருக்கும் தாத்தாவிற்கு ஓர் முத்தம்!
அப்படியே சமையலறை ஓடி
அங்கே வடை சுடும்
பாட்டிக்குத் தரும்
இடுப்பில் ஒரு சுட்டிக் கிள்ளு!
அப்போதெல்லாம்
உள்ளத்தில் ஊறும் உற்சாகம்
சாமிக்கே சவால் விடும்:
"இப்படியொரு இன்பம்
கண்டதுண்டோ நீ?"
குழந்தைகள் இருக்கும்
காலம் முழுவதும்
வீட்டிற்கு வசந்த காலம்!
கடவுளர் அறைக்கு மட்டும்
கார் காலம்!
காலச்சக்கரம் சுழல,
காட்சிகள் மாறும்!
''-வில் ஆரம்பித்தது
'அஃகு'-வில் முடியும்
அந்தக் காலையும் புலரும்!
சேகரித்த பொருட்களை
பெற்றோர்கள்
பெட்டிகளில் அடைக்க,
பேரக் குழந்தைகள்
துக்கத்தை
  மனதில் அடக்கி,
தாத்தா, பாட்டியை
சுற்றிச்சுற்றி வரும் காட்சி...
கூரற்ற வாளென
இதயம் அறுக்கும்!
விமான நிலையம் செல்ல
வாசலில் வண்டி வந்து நிற்க,
அரங்கேறும்
ஆசிர்வாதப் படலம்!
காலில் விழுந்த குழந்தைகள்
கட்டிப் பிடித்து கொண்டு,
"தாத்தா, பாட்டி
பத்திரமாய் இருங்க!"
   என்று தேம்புகையில்,
கண்களில் குளம் கட்டும்
கண்ணீர்!
மறு நாள்,
குழந்தைகள் கைகள் பட்டு
கலைந்த விட்ட பொருட்களை
சரி செய்கையில்,
மனதைக் கொல்லும்
மலையளவு துயரம்!
வாயைத் திறந்து
ஏதாவது பேசினால்,
மனைவி உடைந்து போவாள்
என்று கணவனும்,
இவன் உடைந்து போவான்
என்று அவளும்
மெளனம் காக்க,
வீடெங்கும் நிறைந்திருக்கும்
குழந்தைகளின்
  நறுமணம்;
கூடவே வெறுமையும்!
இப்போதும்,
காலச்சக்கரம் சுழல்கிறது,
மிக...மிக...மெதுவாக!
     ---லினிரா 19/07/21 

ReplyForward

 

 

Friday, July 16, 2021

 

கட்டெறும்பும், நானும்!

படுக்கப் போனேன்!
கட்டிலுக்கருகில்
கட்டெறும்பு ஒன்று!
உயிர்ப்பயம் உந்த,
அறிவு ஆணை இட்டது:
"
உடனே நசுக்கு!"
மனம் மன்றாடியது:
"
உன்னைப் போல்
அதுவும் ஓர் ஜீவன்!
உலகில் உயிர் வாழ
உனக்குள்ள உரிமை
அதற்கில்லையா?"
மனதின் இடி தாங்காது,
கட்டெறும்புக்குக்
கொடுத்தேன் கடவுச்சீட்டு!
நடு நிசி!
விழித்துக் கொண்டேன்!
அறிவுப் பேய்
தலைவிரித்தாடி
என் தூக்கம் குடித்தது:
"
முட்டாள்! உறக்கத்தில்
கட்டெறும்பு கடித்தால்..."
       -
ப.ராம்கோபால்10/07/21 

https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/no_photo.png

ReplyForward