சில நன்றிகள்
1
குளிர் அதிகமாயிருந்தது
அறைக் கதவு, ஜன்னல்கள் எல்லாம் மூடினேன்.
முட்டை விளக்கு வெளிச்சத்தில்
மின் விசிறியின் மென்காற்றில்
வெளிர்நீல பின்னணியில்
சிவப்பு ,மஞ்சள், பச்சை வண்ணப்
பூக்கள் போட்ட மெல்லிய திரைச்சீலை
சற்றே அசைந்தாடியது
ஒரு தேவதையைப் போல!
குளிரே உனக்கு நனறி!
2
மின் கட்டணம் கட்ட
மின் அலுவலகம் சென்றேன்
கணிணிப் பேரிளம் பெண் சொன்னாள்:
“இன்று போய் நாளை வா!”
“ஏன்?” என்றேன்
மின் தடை என்றாள்!!
“நன்றி!” என்றேன்!!!
3
இப்பொழுதெல்லாம்
வேளா வேளைக்கு
கேட்டது கிடைக்கிறது.
சில சமயம்
கேட்காமலும் கிடைக்கிறது.
மனைவி முகம் கொடுத்துப் பேசுகிறாள்;
குழநதைகள் எனைப் பார்த்துச் சிரிக்கின்றன;
பாட்டி கதை சொல்ல
காது கொடுத்துக் கேட்கின்றன;
மின்தடையே உனக்கு நன்றி!
மெழுகுவர்த்தி வெளிச்சம்
எவ்வளவு அழகு!
வெளிச்சத்தில் வீட்டில் படியும்
நிழல்கள் மிக அழகு!
குடும்பம் மொத்தமும் ஒன்றாய்
குவிந்து சாப்பிடுவது கொள்ளை அழகு!
மின்தடையே உனக்கு நன்றி!
நிலவின் ஒளி,
முற்றத்தில் வீசும் தென்றல்,
சுற்றத்தின் நினைப்பு,
தொலைக் காட்சி
தொலைந்து போனது,
எல்லாம் எவ்வளவு சுகம்!
மின்தடையே உனக்கு நன்றி!!
-லினிரா
No comments:
Post a Comment