கனவு - காதல்
கனவு வாழ்க்கை அமைவதே இல்லை!
கனவு தாம்பத்யம் சாத்தியமே இல்லை!
கனவு தெய்வமும் கனவு பக்தனும்
கானல் நீரின்றி வேறில்லை!!
கனவு நண்பரகள் வாய்ப்பதே இல்லை!
கனவு ஆட்சியும் கனவு தேசமும்
கல்லாய் போகும் கனவுகளே!!
கனவு படைப்புகள்
படைக்கப்படுவதே இல்லை!!
கனவு பிள்ளைகளும் கனவு பெற்றோரும்
கனவாய் போகும் கனவுகளே!!
கனவு காதல் , கனவில் மட்டுமே காதல்!!
ஆயினும் மனிதர்கள்
கனவின் மேல் கொள்ளும்
காதல் மட்டும் குறைவதே இல்லை!!
-லினிரா
No comments:
Post a Comment