Thursday, January 31, 2013




                
                        வாழ்க்கையை ருசிக்காலம் வாங்க!      
                                      2
                                  ஆணி -1
           ஆணி ஒரு அற்பமான பொருள். இப்படித்தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
          ஆணியின் முக்கியத்துவத்துதை பற்றி நான் யோசித்ததே இல்லை, கடந்த வாரம் வரை! கடந்த வாரம் நடந்த இரண்டு சம்பவங்கள் ஆணியைப் பற்றிய என் பார்வையை மாற்றின.
          இந்தக் கட்டுரை வாசித்து முடித்தபின்,உங்கள் பார்வையும் மாறும்..
          சம்பவம்1; என் மாமனாருக்கு வயது 90. மாமியாருக்கு வயது 82. அவர்கள் கோவை மாநகரின் மையப் பகுதியில் வசிக்கிறார்கள். நானும் என் மனவியும் நகரிலிருந்து சற்றெ தள்ளி, அதாவது, 12 மையில் தொலைவில் மருதமலை அடிவாரத்தில் வசிக்கிறோம். என் மனைவிக்கு ஓர் ஆசை: கடைசி காலத்தில் தன் அருகிலேயே  தன் பெற்றோர்களைக் கொண்டு வந்து வைத்துக்கொண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தரவேண்டும். என் மாமனாருக்கும் எனக்கும் இருக்கும் குண விஷேசப் பொருத்தங்கள் பற்றி என் மனைவிக்கு  நன்றாகத் தெரியும். அதனால்  எங்கள் வீட்டிலேயே அல்லாமல் பக்கத்தில் எங்காவது அவர்களுக்கு வீடு பார்ப்பது என முடிவு செயதாள். நானும் தலயை ஆட்டிவைத்தேன்.
         என நல்ல உள்ளத்திற் கேற்றார் போல் எதிரே இருந்த வீடு காலியாயிற்று.. வீட்டின் உரிமையாளர்  கணவணை இழந்தவர். பேச்சு வார்த்தை ஆரம்பமனது. என் மனைவி எப்படியாவது அந்த வீட்டை “அமுக்கியே” ஆகவேண்டும் என்று தீவிரமாக இருந்ததால் வீட்டுக்காரம்மா சொன்ன வாடகை, முன்பணம், மற்ற அனைத்து  நிபந்தனைகளுக்கும் ஒத்துக்கொண்டாள். கடைசியில் பிரச்சனை ஒருஆணி ரூபத்தில் வந்தது! வீட்டுக்காரம்மா சொன்னார்:
        “சுவற்றில் ஆணி அடிக்கக் கூடாது.”
        நான் சொன்னேன்:
        ”அக்வா கார்டு” மாட்டவேண்டும்; அதற்கு ஆணி அடிக்க வேண்டும்.”
        “எவ்வளவு ஆணி?”
        “யூனிட்டின் மேல் பகுதியில் இரண்டு; கீழ் பகுதியில் இரண்டு.”
        “எதற்கு நான்கு ஆணிகள்? இரண்டு போதுமே!”
        “எங்களது மோட்டார் மாடல். நான்கு ஆணிகள் அவசியம். இல்லையென்றால் மோட்டார் ஓடும் போது யூனிட் பழுதாகிவிடும்.”
         “அதெல்லாம் முடியாது. ரெண்டு ஆணிதான்!”.
         இப்படியாக  பெற்றோர்களை, அவர்கள் கடைசிக் காலத்தில் தன் அருகிலேயே வைத்தப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற என் மனவியின் ஆசை நிராசையானது. “இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா?” என்று நீங்கள் நினைக்கலாம்.. உங்களுக்கும் அதிர்ஷ்டமிருந்தால் இப்படிப்பட்ட அதிசய பிறவிகளை உங்கள் வாழ்க்கையின் எதாவது ஒரு புள்ளியில் நீங்களும் சந்திக்கலாம்.
        
                                     - அடுத்த சம்பவம் அடுத்த வாரம்

-லினிரா/01/02/13