Wednesday, April 14, 2021

 


      

கடவுளும், காப்பியும்

          -லினிரா 15/04/21

பொழுது மலர்ந்தது!                              

மூடியிருந்த கதவை

மெல்லத் திறந்தேன்!

மேற்கு மலை மென்தென்றல்,

மெல்லவே கன்னத்தை வருடி,

“செளக்கியமா?” என்றது.

“ம்ம்” என்றேன்!

சற்றே தலையைத் திருப்ப,

செடிகள் அசைந்திடக் கண்டேன்!

இலைகளுக்கு நடுவே,

ஒளி முக்கோணங்களின்

எழில் மிகு நடனங்கள்!

ஒன்றை ஊடுருவிப் பார்த்தேன்!

ஓர் குரல், “அருகே வா!” என்றது!

இன்னும் கூர்ந்து பார்த்தேன்,

இருகரம் நீட்டி அழைத்தது இறைவன்!

அருகே செல்ல ஓரடி எடுத்து வைத்தேன்!

அந்த க்ஷணம்,

வீட்டிலிருந்து ஓர் குரல்:

“என்னங்க! ’காபி’!

கடவுளை மறந்தேன்,

காப்பியை நாடி ஓடினேன்!

       

No comments:

Post a Comment