பதில் சொல்லுங்கள்!
---லினிரா
கோழி பிரியாணி கொடுத்தீர்கள்!
குவார்ட்டர் கொடுத்தீர்கள்!
நோட்டு எதற்குக் கொடுத்தீர்கள்?
மருத்துவச் செலவுக்கா?
மயனாச் செலவுக்கா?
*******
எப்போதும் போல்
இப்போதும்,
மாறி மாறி
ஒருவரையொருவர்
சாடிக் கொள்ளும்
அன்பான அரசியல்வாதிகளே,
அனைவரும் சேர்ந்து
தேர்தலை ஒத்திவைக்கச்
சொல்லி இருக்கலாமே!
பாதிக்கப்பட்டவர்களின்
குழுந்தைகள் கேட்கிறார்கள்,
பதில் சொல்லுங்கள்!
***
அறநெறி பிறழாது,
ஆட்சி செய்யும்
அருமைத் தலைவர்களே,
நீங்களாவது தேர்தலை
ஒத்தி வைத்திருக்கலாமே,
பாதிக்கப்பட்டவர்களின்
குழந்தைகள் கேட்கிறார்கள்,
பதில் சொல்லுங்கள்!
***
அனைத்தும் அறிந்த
அறிவுசால் அதிகாரிகளே!
உயிர்காக்கும் மருத்துவர்களே,
நீங்கள்கூட தேர்தலை
தள்ளிவைக்க ஆலோசனைகள்
தந்திருக்கலாமே!
பாதிக்கப்பட்டவர்களின்
குழந்தைகள் கேட்கிறார்கள்
பதில் சொல்லுங்கள்!
****
அன்புள்ளவர்களே,
மருந்து வேண்டாம்,
மருத்துவமனை வேண்டாம்
தடுப்பூசியும் தராதீர்கள்!
மயானம் மட்டுமாவது தரமுடியுமா?
மேன் மக்களில் யாராவது
பதில் சொல்லுங்கள்!
கைகளில் பிணத்தை
சுமந்து கொண்டு
செத்துப் போனவர்களின்
சொந்தங்கள் பிச்சை கேட்கிறார்கள்,
பதில் சொல்லுங்கள்!
No comments:
Post a Comment