Thursday, May 13, 2021

 

பிறந்த குழந்தையை

காட்டினார் செவிலி!

அரைக்கண் மலர

என்னைப் பார்த்து,

இதழ்களை லேசாய்

அசைத்தது அது!

முறுவலா?

முகச்சுழிப்பா?

ரோஜா மேனி,

செம்பஞ்சுப் பாதங்கள்!

தொட்டுப் பார்க்க

துடித்தது மனம்!

பாவத்தின் நிழல்

பட்டுவிட்டால்?

புனிதம் கெட்டுவிட்டால்?

 14/04/21       -லினிரா

No comments:

Post a Comment