காஷ்மீர் கம்பளம்
ஒவ்வொரு முறையும்
தடுக்கி விழும் போது
அடி படவில்லை!
கீழேதான்
காஷ்மீர் கம்பளம்
விரிக்கப்பட்டிருந்ததே!
இன்றும்
விழுந்தேன்!
சரியான அடி!
(கீழே கா.கம்பளம் இல்லை!)
"ஏன் இப்படி?"
என்ற கேள்வி
மனதைக் குடைய
காதைச் சற்றே கூர்மையாக்கினேன்!
காதில் கிசுககிசுத்தது ஓர் குரல்:
"நண்பா!
உங்கள் ஊரில்
கொரானாவாமே!
அதனால்தான்,
கா.கம்பளம் விரிக்க
நான் வரவில்லை,"
என்றான் கடவுள்!
25/05/21 -லினிரா
No comments:
Post a Comment