அப்பாவுக்கு அஞ்சலி!
அம்மா என்றால் அன்பு!
அப்பா என்றால் அக்கறை!
அம்மா என்றால் பாசம்!
அப்பா என்றால் பரிவு!
அம்மா என்றால் அரவணைப்பு!
அப்பா என்றால் கண்டிப்பு!
அம்மாவுக்கு நாம் பஞ்சாரக் கோழி!
அப்பாவுக்கு நாம் வானம்பாடி!
அம்மா நமக்கு சோறு ஊட்டுகிறாள்!
அப்பா நம் வாழ்க்கைக்கு சாரம் ஏற்றுகிறார்!
அம்மா வீட்டில் உழல,
அப்பா உலகில் உழல்கிறார் நமக்காக!
அம்மா நம்மை கைபிடித்து
அழைத்துச் சென்றாள் பள்ளிக்கு!
அப்பா நம் கரம்கோர்த்து
அழைத்துச் சென்றார் வாழ்க்கைப் பள்ளிக்குள்!
அம்மா தன் தேவைகளை
அவ்வப்போது நம்மிடம் சொல்வாள்!
அப்பா நம் தேவையே
தன் சேவையேன வாழ்வார் எப்போதும்!
அம்மா கேட்பாள் ஆயிரம்!
அப்பா கேட்பதில்லை எதையும்!
அம்மா ஓர் கவிதை!
அப்பா ஓர் காப்பியம்!
கவிதை புரியும்!
காப்பியம் புரிவதில்லை,
முழுமையாக, என்றும்!
அம்மாவின் பாசமெல்லாம்
அன்பு மனைவி வரும் வரையே!
மனைவியென ஒருத்தி வந்து விட்டால்,
தினம் தினம் குருஷேத்திரம்!
"'இருதலைக் கொள்ளி எறும்பு'
இதுதான்!" புரியும் அப்போது!
அப்பாவின் அக்கறையோ,
குந்து மணியும் குன்றாது,
குவலயம் அவர் நீங்கும் வரை!
அவ்வப்போது,
அப்பா மடி மீது முகம் புதைத்து
அழுதிருக்க ஆசைதான்!
ஆனால்...
--லினிரா,
20/06/21
|
|
|
No comments:
Post a Comment