நெஞ்சு பொறுக்குதில்லையே...
கொரொனா காட்சிகள்
தொலைக் காட்சியில்
ஆனந்தத் தாண்டவம்!
மொத்த குடும்பமும், அரைவட்டமாய் அமர்ந்து,
"கண் வண்ணம் காட்சி கண்டு
கை வண்ணம் வாய் கண்டு"
பீஸாவும், பர்கரும், பிரியாணியும்
சுவைத்திருக்க,
அந்த ஆறு வயது சிறுமி மட்டும்
தொலைக்காட்சி அருகே நின்று
அதையே பார்த்துக்கொண்டிருந்தாள்!
மொத்த குடும்பமும்
குழந்தையைப் பார்த்துக் கத்தியது:
"ஏய்! தள்ளிப்போடீ!
டி.வி. சரியாத் தெரியலை!" திரும்பிய சிறுமியின் கண்களில்,
கண்ணீர்த் திவலைகள்!
தொலைக்காட்சித் திரையில்
இப்போது தெளிவாகத் தெரிந்தது,
கருகியும், கருகாமலும்,
தரையில் கிடத்தப்பட்டிருந்த
அவள் தோழியின் குடும்பம்!
---லினிரா.18/06/21
No comments:
Post a Comment