Friday, July 16, 2021

 

காரும், கால்களும்!

காரிலிருந்து
இறங்கிய சீமாட்டி
சாலையோர
செருப்புத் தைப்பவனிடம்
சென்றாள்!
ஐந்து ரூபாய் கேட்டவனிடம்
இரண்டு ரூபாய்
பேரம் பேசி
செருப்பை சீர் செய்து கொண்டு
இறுமாப்புடன் நடந்து போனாள்!
அவள் கொடுத்ததோ
இரண்டு ஓற்றை நாணயங்கள்!
அதிலொன்று கருங்கருப்பு!
அவள் சென்ற பின்,
நான் அவனிடம் சென்றேன்,
என் செருப்பை சீர் செய்ய!
பத்து ரூபாய் கேட்டவனிடம்
"கொஞ்சம் குறைத்துக் கொள்!"
எனக் கூச்சத்துடன் கேட்டேன்!
"முடியாது!" எனச் சொல்லி
முறைத்தவனிடம்,
காலணியைக் கொடுத்தேன், காணும் வழி வேறின்றி!
தையலுக்கோ நான்கு தையல்!
எனக்கோ
  இரண்டுதான்!
என்னிடம் இருப்பது
கால்கள்தானே!
காரல்லவே!
      -ப. ராம்கோபால் 17/07/21 

ReplyForward

 

 

No comments:

Post a Comment