வீட்டில் கால் தரிக்காமல்
வீட்டில் கால் தரிக்காமல்
ஊர் சுற்றிச்சுற்றி வந்தோம்
உலக வம்பெல்லாம்
உடுத்தி மகிழ்ந்தோம்!
சொல்லெல்லாம் செல்லாகவே போன
மக்களைக் கண்டுமறுகினோம்;
கையிலிருக்கும் செல்லைக்
கண்களால் கைது செய்த,
பேரன் பேத்திகளை, என் செய்வது
எனத் தெரியாமல் திகைத்தோம்!
எப்போதாவது கரம் பிடித்தவள்
செவியோரம் செல்லை கொண்டு போனாலே
சுட்டெரித்தோம் பார்வையால்!
இன்றோ
செல்லே கதியென்று
நாம் கிடக்க,
நம்மைப் பார்த்து விதி சிரிக்கிறது:
"பிறர்க்கின்னா முற்பகல் எண்ணின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்!"
- லினிரா