மின்னல், மழை, மோகினி!
ஒளியற்ற மின்னல்,
ஓசையற்ற இடி,
சிறு துளிகளாய் பெருமழை!
விழுந்த துளிகளெல்லாம்
நீரற்ற நதியில் நீந்தி,
ஓர் பந்தினை துளைக்க
முட்டி மோதின!
பந்தினுள் இருந்த மோகினி
கதவை திறந்து
ஓர் துளியை உள்ளேவிட
மற்ற துளிகளெல்லாம்
மடிந்து போயின ஏக்கத்தில்!
ஊள்ளே நடந்தது
ஆனந்தத் தாண்டவம்!
ஐயிரண்டு திங்களில்
வையகம் காணும்
ஆண்டவன் திருக்கோலம்!
-லினிரா